கோயிலுக்கு சென்றவர் வீட்டில் தீ விபத்து: பொருள்கள் சேதம்

சிவராத்திரி தரிசனத்திற்கு கோவிலுக்கு சென்றபோது, பூட்டிய வீட்டில் தீ விபத்து. வீட்டுப்பொருட்கள் முழுவதுமாக தீயில் கருகி சேதம்;

Update: 2024-03-09 13:32 GMT

மதுரையில் கோயிலுக்கு சென்றவர்  வீட்டில் தீ விபத்து.

மதுரை மாநகர் தபால் தந்தி நகர் மீனாட்சி நகர் போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியில் ஜனார்த்தனன் என்பவரது வீட்டில் மேல்மாடியில் நாகராஜன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வாடகைக்கு வசித்து வருகிறார்.

இன்று சிவராத்திரி என்பதால், மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் உள்ள குலசாமிகோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார் .

இந்த நிலையில் இரவு 10 மணி அளவில், திடீரென வீட்டில் உள்ள சாமி அறையில் இருந்து தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத்துறையினர், வீட்டிற்குள் சென்று தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து காரணமாக வீட்டிற்குள் இருந்த ப்ரிட்ஜ், அலமாரிகள் மற்றும் பூஜை பொருட்கள் துணிகள் முழுவதுமாக தீயில் கருகி முழுவதுமாக சேதமடைந்தது.

தீப்பற்ற தொடங்கியதால், மாடிவீட்டில் இருந்து மின்கம்பிகளில் தீ பரவ தொடங்கிய நிலையில் தீயணைப்புத்துறையினர் மின்சார இணைப்பை துண்டித்தனர்.

குறுகலான மாடி வீடு என்பதால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் இருந்தபோதிலும், தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், வீட்டிற்குள் உள்ள சாமி அறையில் ஏற்றி வைத்த விளக்கில் இருந்து தீ ஏற்பட்டதா? பிரிட்ஜ்சில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக என, தல்லாகுளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தீ விபத்தின் போது, நல்வாய்ப்பாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News