மதுரை அருகே வைக்கோல் படப்பில் தீ விபத்து
மதுரை கூத்தியார்குண்டு அருகே வைக்கோல் படப்பில் தீ விபத்து ஏற்பட்டது.;
தீயை போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்.
மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு அருகே உள்ள, கருவேலம்பட்டி என்ற கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் தனது வீட்டின் அருகே110 கட்டு உள்ள வைக்கோல் படப்பு வைத்திருந்தார். அதில் இருந்து கரும்புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் மளமளவென, அது தீப்பிடித்து எரியத் தொடங்கின.
இதைப் பார்த்த, ஆறுமுகம், திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து, திருமங்கலம் நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து, திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.