என்னால் கூட மின்சாரம் கட்டணம் கட்ட முடியவில்லை: முன்னாள் அமைச்சர் வேதனை
என்னால் கூட மின்சாரம் கட்டணம் கட்ட முடியவில்லை என முன்னாள் அமைச்சர் உதயகுமார் வேதனையுடன் கூறினார்.
இரண்டு முறை அமைச்சராகவும் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற என்னாலே மின்சார கட்டணத்தை கட்ட முடியவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேதனையுடன் பேசினார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கிய பின்பு கலந்தாய்வுக் கூட்டம் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது .
இக்கூட்டத்தில், கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசுகையில் கூறியதாவது:-
திமுக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது இரண்டு முறை அமைச்சராகவும் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற என்னாலே கூட மின்சார கட்டணத்தை கட்ட முடியவில்லை அவ்வாறு இருக்கும் போது இந்த மின்சார உயர்வால் சாமானிய மக்கள் எவ்வாறு மின்சார கட்டணம் கட்டுவார்கள்.
இந்த திமுக அரசால் சொத்து வரி 150 சதவீதம் உயர்ந்திருக்கிறது.மேலும், ஆண்டிற்கு சொத்து வரி 6 சதவீதம் உயர்த்த போகிறார்கள் . முதல்வர் ஸ்டாலின் இனி எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் ஜெயிப்போம் என்று கூறுகிறார். தமிழ்நாட்டில் ஜெயிக்க மாட்டீர்கள் அந்தமானில் வேண்டு மென்றால், ஜெயிப்பீர்கள்.
தமிழ்நாடு போதைப்பொருள் கேந்திரமாக உள்ளது என்று, நீதிமன்றத்திலே நீதி அரசர்கள் கூறுகின்றார்கள் .கொலை, கொள்ளை, கற்பழிப்பு என சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கேடாக உள்ளது .
எங்கு இருக்கிறார் இந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன். அவரை எங்கும் காணவில்லை இங்கு இருக்கும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியால், அவர் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை .
கட்சைகட்டியில் இருந்து நான் கேட்கிறேன், வெங்கடேசன் அவர்களே உங்களால் அமைச்சரிடம் பேசி உங்கள் தொகுதிக்கு ஏதாவது திட்டம் பரிந்துரைத்து அந்த திட்டம் செயல்படுத்தி இருக்கிறது என்று, உங்களால் பட்டியலிட்டுகூற முடியுமா?
இவ்வாறு அவர்பேசினார்.