புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய நுண்கதிர் பணியாளர் சங்கம் கோரிக்கை

மதுரையில் தமிழ்நாடு நுண் கதிர் தொழில்நுட்ப பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது;

Update: 2023-04-18 06:15 GMT

பைல் படம்

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு நுண்கதிர் பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுரையில் தமிழ்நாடு நுண் கதிர் தொழில்நுட்ப பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வைத்தார். மாநில அமைப்பு செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.

பொதுச் செயலாளர் விஸ்வநாதன் கோரிக்கைகள் குறித்து விளக்கினார். செயலாளர் பாபு, அரசு பணியாளர் சங்க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ரேடியோகிராபர், இருட்டறை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எக்ஸ்ரே கண்டுபிடித்த பேராசிரியர் ராண்ட்ஜென் பெயரில் சிறந்த பணியாளர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பழைய திட்டத்தில் பணி ஓய்வு பெறும்போது ஊழியர்கள் பெறும் ஊதியத்தில் பாதி ஓய்வூதியமாகக் கிடைக்கும். இதற்காக ஊழியர்களின் பணிக் காலத்தில் அவர்களது ஊதியத்திலிருந்து பிடித்தம் எதுவும் செய்யப்படாது. அதே நேரத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் மற்றும் அகவிலைப்படி பிடித்தம் செய்யப்படும்.

Tags:    

Similar News