சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ,தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்...!
உசிலம்பட்டியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சாம்சங் நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம்.நடத்தினர்.
உசிலம்பட்டி.:
சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, உசிலம்பட்டியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாச் சத்திரத்தில் சாம்சங் தொழிலாளர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் சூழலில், இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி,கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளர்களிடம் மத்திய மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் என, கோசங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒரு நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆசிரியர்கள் குரல்கொடுப்பது தொழிலாளர்கள் ஒற்றுமையை உணர்த்துகிறது. ஒருவருக்கு ஒரு பிரச்னை என்றால் குரல்கொடுக்க நாங்கள் இருக்கிறோம் என்று கைகொடுக்கும் இந்த பண்பு சிறப்பானது என்றாலும் கூட கல்வி பாதிப்பு இல்லாமல் ஆதரவு தெரிவிப்பது சிறப்பானது.