மதுரையில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு
மதுரையில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
மதுரை வில்லாபுரம் வீட்டு வாரிய வசதி குடியிருப்பு பகுதியில் மின்கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் பணியில் இருந்த மின் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரியகுடியிருப்பு பகுதி பூ மார்க்கெட் அருகே பழுது ஏற்பட்டிருந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
ஐந்துக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது , மின்கம்பம் திடீரென விழுந்ததில் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த சின்னராசு மகன் முத்துக்குமார்( வயது 46 ). மீது விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிசில் இருந்த முத்துக்குமார் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி வில்லாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணியின் போது மின்கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் மின் வாயரிய ஊழியர் முத்துக்குமார் உயிரிழந்த சம்பவம் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.