மதுரை பஸ் நிலையம் அருகே மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு

மதுரையில் நடந்த பல்வேறு குற்றசம்பவங்களில் தொடர்புடைய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்;

Update: 2023-01-28 10:30 GMT

பைல் படம்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்தார்

சிவகங்கை அருகே கஞ்சிராங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்( 54.),   சொந்த வேலையாக மதுரை வந்த இவர் பெரியார் பேருந்து நிலையத்தில் பாத்ரூம் அருகே சென்றபோது திடீரென்று மயங்கி விழுந்தார்ய இதைர்பார்த்த அருகிலிருந்தோர் சென்று பார்த்தபோது இவர் இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் பிரகாஷ் திடீர் நகர் போலீஸ் புகார் செய்தார். போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து கணேசன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாண்டி கோவில் அருகே அப்பார்ட்மெண்டில் வீடு புகுந்து பத்தரை பவுன் நகை திருட்டு

மதுரை பாண்டிகோவில் அருகே அபார்ட்மெண்டில் வசித்துவருபவர் முருகேசன் மகன் ஹரிஷ் குமார்(36.) சம்பவத்தன்று இவரது வீடு புகுந்த மர்ம  நபர்  வீட்டில் பீரோவில் வைத்திருந்த பத்தரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து  பின்னர் தெரிய வந்தது. இது குறித்து ஹரிஷ் குமார் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மதுரையில் வெளிநாட்டு மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த இரண்டு பேர் கைது

மதுரையில் கேகே நகர் 80 அடி ரோட்டில் வெளிநாட்டு மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்தை கண்காணித்து சோதனை செய்தபோது 80 அடி ரோட்டில் கைலாஷ் தாஸ்(42 ) என்பவர் 135  புல் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து மது பாட்டில்களையும்  ஒரு செல்போனையும் பறிமுதல் செய்து கைலாஷ்தாசை கைது செய்தனர்.

செல்லூர் சினிமா தியேட்டர் அருகே மது பாட்டில்கள்  பறிமுதல் 

செல்லூரில் சினிமா தியேட்டர் அருகே வெளிநாட்டு மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த செல்லூர் குமரன் இரண்டாவது தெருவை சேர்ந்த கதிரவன்(42)என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 புல் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர் .

கணவர் சாவில் மர்மம் : கந்துவட்டி கொடுமையால் இறந்ததாக மனைவி புகார்

மதுரை முனிச்சாலை பூந்தோட்டம் முத்துகிருஷ்ணன் மனைவி பத்மாவதி( 52.) இவரது கணவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இறந்துவிட்டார் .இதை இயற்கை மரணம் என்றே மனைவி நம்பியிருந்தார.இந்த நிலையில் மனைவி பத்மாவதி வீட்டை சுத்தம் செய்த போது கணவர் எழுதிய டைரி சிக்கியது .அதை படித்துப் பார்த்தபோது கந்துவட்டி கொடுமையால் தான் இறந்ததாகவும் இதற்கு இளங்கோ, செந்தூரபாண்டியன், மணி, மகாலிங்கம், முத்துராமன், முத்துராமலிங்கம், பரிகரன், ராஜு ஆகியோர்தான் காரணம் என்றும் எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

இதில் ராஜூ என்பவர் அவரை ஆபாசமாக பேசி அதிக வட்டி வசூலித்து மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கணவர் இயற்கையாக இறந்துவிட்டதாக நம்பி இருந்த மனைவி பத்மாவதி கந்துவட்டி கொடுமையால் மேற்கொண்ட நபர்கள் மிரட்டியதால் இறந்ததாக தெப்பக்குளம் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் எட்டு பேர் மீது கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News