திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை பற்றி பேசினார்.

Update: 2023-08-30 05:00 GMT

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசுகிறார், காவல் ஆய்வாளர் பால்ராஜ்.

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் போதை இல்லா சமுதாயம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது:

மதுரை மாவட்டம்,திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், அகத்திர உறுதி மையமும் போதை ஒழிப்பு கமிட்டியும் இணைந்து நடத்திய போதை இல்லா சமுதாயம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். கருத்தரங்கில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் ஜி. பால்ராஜ்  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை பற்றி  பேசினார்.

கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த, கல்லூரியின் முதுநிலை மாணவர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எல்லைராஜா, மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருங்கிணைப்பாளர் ரகு, தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், கணிதத் துறை பேராசிரியர் முனைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகத்திர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை ஆற்றினார்.

முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் தர்மானந்தம் நன்றி உரையாற்றினார்.  நிகழ்வை, போதை பொருள் ஒழிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்லப்பாண்டியன் தொகுத்து வழங்கினார்.  அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கு பெற்றனர்

Tags:    

Similar News