திருமங்கலம் அருகே அம்மா அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கல்
கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட கொரோனா முதல் அலையில் நோய் தொற்றாளர்களுக்கு உணவே மருந்தாக 5 வேளையும் வழங்கப்பட்டது;
திருமங்கலம் அருகே குன்னத்தூரில் அம்மா சாரிடபுள் டிரஸ்ட் சார்பில் அன்னதானம் நடைபெற்றது
மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி டி. குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில் அம்மா சேரிடபுள் டிரஸ்ட் சார்பில், நடைபெற்ற அன்னதானம் நிகழ்வில், மாநில அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், உணவு தயார் செய்யும் இடத்தை பார்வையிட்டு அதனை த் தொடர்ந்து, சமையல் கலைஞருடன் சேர்ந்து தானும் சமையல் பணியில் ஈடுபட்டு வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: புரட்சித்தலைவி அம்மாவின் பெயரில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட கொரோனா முதல் அலையில் போது உணவே மருந்தாக 5 வேளையும் கொரோனா நோய் தொற்றாளர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த 5 மாதங்களில் 15லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, எடப்பாடியார், ஓபிஎஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, அம்மாவின் பெயரில் இது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார்.