குழந்தையின் தலையை தூக்கி வந்த நாய் - மதுரையில் பரபரப்பு
மதுரையில், பிறந்து ஒருநாளே ஆன பச்சிளங் குழந்தையின் தலையை நாய் தூக்கிவந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.;
மதுரை பீ.பீ.குளம் வருமானவரித்துறை அலுவலகம் பகுதியில், நாய் ஒன்று, பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் தலையை தூக்கி வந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த அய்யனார் என்ற கூலித் தொழிலாளி, இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இறந்த குழந்தையின் தலையை மீட்டுச் சென்ற தல்லாகுளம் காவல்துறையினர், இதுபற்றி விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.