மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான தனிநபர் சுத்தம் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

Update: 2024-08-03 11:20 GMT

மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி:

மதுரை:

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் வளர்ச்சி மற்றும் அதிகாரம் அளித்தல் ஒருங்கிணைந்த மையத்தில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான,தூய்மை விழிப்புணர்வு பேரணியை மாமன்ற உறுப்பினர் போஸ் முத்தையா துவக்கி வைத்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.

மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகம் மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரி மளித்தல் துறையின் கீழ் ஊனமுற்றோர் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் நச்சி கேந்திரா ராவுத் உத்தரவின் பேரில்,மதுரை வில்லாபுரம் ஹவுஸிங் போர்டில் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் வளர்ச்சி மற்றும் மறுவாழ்வு அதிகாரம் அளித்தலுக்கான ஒருங்கிணைந்த பிராந்திய மையத்தில் தூய்மையான 15 நாட்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, மாற்றுத்திறனாளி குழந்தை கள்தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாந்தைகளை பதாகைகளை ஏந்தி வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள பூ மார்க்கெட் மற்றும் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ரோடு ஆகிய பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர். மேலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவிழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர்.

மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் இடம் தூய்மையாக இருப்பது குறித்து விளக்கம் அளித்து மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு குறித்து விளக்கினர். மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் எவ்வாறு கழுவ வேண்டும் என, விளக்கம் அளித்தனர்.

மேலும்,தூய்மை பதினைந்து நாட்கள் நிகழ்ச்சி ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 2 வரைநடைபெற்றது. மேலும், நிகழ்ச்சிக்கான பிலிப்புரவு பேரணியை மாற்றுவது திறனாளிகள் மறுவாழ்வு நல அலுவலர் நடேசன் நித்தியானந்தம் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் வெற்றிவேல் ராஜா சிறப்பு கல்வி ஆசிரியர் ரமணன் பேச்சு பயிற்சி ஆச்சரியர் உமா மகேஸ்வரி மற்றும் தொழில் பாதுகாப்பு ஆலோசகர் லியோ ஆகியோர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வழிகாட்டுதல், திறன் மேம்படுதல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து விளக்கினர்.

Tags:    

Similar News