மதுரை மீனாட்சியம்மன் ஆலய உண்டியலில் பக்தர்கள் ரூ.1.51 கோடி காணிக்கை
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் மற்றும் 11 உபகோவில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றது;
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் உபகோவில்களின் கோயில் உண்டியல் எண்ணிக்கை நடத்தியதில் மொத்தம் ரூ.1.51 கோடியே 41லட்சத்தி 196காணிக்கை கிடைத்தது
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணைஆணையர் செயல்அலுவலர் .க.செல்லத்துரை முன்னிலையில், 25-01-2022 அன்று இத்திருக்கோயில் மற்றும் 11 உபகோவில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றது. மேற்படி, உண்டியல் திறப்பு நிகழ்வில், மதுரை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மு.விஜயன், திருக்கோயில் உதவி ஆணையர் நாராயணன் இத்திருக்கோயிலின் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், மதுரை இந்துசமய அறநிலையத்துறை தெற்கு ,மேலூர் சரக ஆய்வர்கள் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்துகொண்டார்கள்.
இத்திருக்கோயில் மற்றும் 11 உபகோவில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றதுதிருக்கோயில் மற்றும் உபகோவில்களின் உண்டியல் திறப்பில் ரொக்கமாக ரூ. 151,41,196 /- ( ரூபாய் ஒருகோடியே ஐம்பத்தியொரு லட்சத்து நாற்பத்தி ஒன்றாயிரத்து நூற்றி தொன்னூற்றி ஆறு மட்டும் ) பலமாற்று பொன் இனங்கள் ஒருகிலோ 120 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 3கிலோ540கிராம், அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 117 வரப்பெற்றுள்ளன.