தமிழக அரசைக் கண்டித்து, மதுரையில் தேமுதிக வினர் ஆர்ப்பாட்டம்
மதுரையில், தேமுதிக சார்பில், தமிழக அரசை கண்டித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க, மதுரை தேமுதிக ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக, மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராஜேந்திரன், உயர்மட்ட குழு உறுப்பினர் பாலன், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துப்பட்டி மணிகண்டன், புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் கணபதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழக அரசை கண்டித்தும், திமுக தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ருபாய் கட்டாயம் வழங்க வேண்டும் , விளை நிலங்களை அழித்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவும், அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வு , மின்சார கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் மற்றும் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், அண்ணாநகர் பகுதி செயலாளர் முருகன், முனிச்சாலை பகுதி செயலாளர் ராஜ்குமார் , மற்றும் மாவட்ட அணி அமைப்பாளர்கள் மகளிர் அணியினர் பகுதி. ஒன்றியம், நகரம், வட்டம், ஊராட்சி, வார்டு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.