மதுரை அருகே டி. கல்லுப்பட்டியில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை அருகே டி. கல்லுப்பட்டியில் திமுக அரசைக் கண்டித்து ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-11-09 08:58 GMT

டி. கல்லுப்பட்டியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைதிருக்கும் திமுக அரசை கண்டித்து, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக டி. கல்லுப்பட்டியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

அருகில், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் எம் விபி ராஜா முன்னாள் எம்எல்ஏக்கள் சோழவந்தான் எம். வி. கருப்பையா, மதுரை தெற்கு சரவணன், சோழவந்தான் மாணிக்கம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் வாடிப்பட்டி பேரூர் கழக செயலாளர் ராஜேஷ்கண்ணா, அலங்காநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் வேலுசாமி, வாவிடமருதூர் குமார், சின்னபாண்டி, ஒன்றிய கவுன்சிலர்கள் அரியூர், இராதாகிருஷ்ணன் கருப்பட்டி தங்கப்பாண்டி, நாச்சிகுளம் தங்கப்பாண்டி, தென்கரை ராமலிங்கம், மகளிர் அணி செயலாளர் லட்சுமி, மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய பேரூர் கிளை கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags:    

Similar News