மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு கடைகள் அடைப்பு: வெறிச்சோடிய சாலைகள்
திருப்பரங்குன்றம் பகுதியில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடியது.;
மதுரை விமான நிலையம்,பெருங்குடி, விரகனூர் வலையங்குளம்|மதுரை நான்கு வழிச்சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தால், வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இரண்டாவது வாரமாக இன்று திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
போலீசார் தடுப்பு வேலி அமைத்து தேவையின்றி வெளியே இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வருபவர்கள் பிடித்து எச்சரித்து வருகின்றனர்.
மேலும் ,முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபதாரம் விதித்து வருகின்றனர்.அத்தியாவசியமான மருந்து கடைகள் உணவு, பால், கடைகள் திறந்து இருப்பதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.