மதுரை நகரின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள்
பெட்ரோல் பங்கில் இளைஞரின் ஏடிஎம் கார்டை திருடி ரூ.20ஆயிரம் எடுத்து ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
இளைஞரின் ஏடிஎம் கார்டை திருடி ரூ.20ஆயிரம் 'அபேஸ்'
மதுரை ஆத்திகுளம் பெட்ரோல் பங்கில் வாலிபரின் ஏடிஎம் கார்டை திருடி அதிலிருந்து, ரூபாய் 20ஆயிரம் திருடிய ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆத்திகுளத்தை சேர்ந்தவர் குமரன் மகன் அஸ்வன்29. இவர், ஆத்திகுளம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிய போது அவருடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டது.
அந்த கார்டை எடுத்த மர்மநபர் அதிலிருந்து ரூ.20 ஆயிரத்தை எடுத்துள்ளார். பின்னர், அந்த தகவல் குறுஞ்செய்தி மூலமாக அஸ்வினுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநகரில் போலி பீடி பண்டல்கள் விற்பனை: ஒருவர் கைது
மதுரை டிவிஎஸ் நகர், சத்யசாய் நகரை சேர்ந்தவர் முகமது அப்துல்லா 46. இவர்களது நிறுவனத்தின் தயாரிப்பைப் போல போலியான பெயரில் பீடிப் பண்டல்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பூங்கா பஸ் ஸ்டாப் பாலாஜி நகர் சந்திப்பில், பைக் ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 20 பண்டல்களையும் பைக்கையும் பறிமுதல் செய்து, செக்கானூரணியை சேர்ந்த சக்திவேல் 50. என்பவரை கைது செய்தனர்.
கீரைத்துறையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
மதுரை சிந்தாமணி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சரவணகுமார் மகன் தீனதயாளன். இவர் சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவு குறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து இவரது தற்கொலைக்கான காரணம் என்ன என விசாரித்து வருகின்றனர்.