கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை மீட்ட தீயணைப்பு துறையினர்

திருமங்கலம் சித்தாளை மெயின்ரோட்டில் உள்ள சித்தாளையில், கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

Update: 2021-09-22 10:30 GMT

திருமங்கலம் அருகே, கிணற்றில் தவறி விழுந்தது போராடிய பசுமாட்டை, மீட்ட தீயணைப்பு துறையினர்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் சித்தாளை மெயின்ரோட்டில் உள்ள சித்தாளையில், சுந்தரபாண்டி என்பவரது மாடு, புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப் போது எதிர்பாராமல் அருகில் உள்ள பசுங்கன்று கிணற்றில் தவறி விழுந்து.

கிணறு, 40 அடி ஆழம் இருந்த நிலையில், உயிருடன் பசுங்கன்றை மீட்கப்பட்டு பொதுமக்கள் மீட்க முயற்சி செய்தனர். எனினும், மீட்க முடியவில்லை. உடனடியாக, திருமங்கலம் தீயணைப்பு மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெ. ஜெயராணி மற்றும் குழுவினர், விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்த பசுமாட்டை கயிறு மூலம் பத்திரமாக மீட்டு  காப்பாற்றினர்.

Tags:    

Similar News