மதுரை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் 02.09.2021-அன்று நடைபெற உள்ளதாக கலெக்டர் தகவல்.
மதுரை மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் 02.09.2021-அன்று நடைபெற உள்ளது.
அதன்படி மதுரை வடக்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், மேலூர், கொட்டாம்பட்டி, டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி, திருமங்கலம், கள்ளிக்குடி, செல்லம்பட்டி, உசிலம்பட்டி, வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.
இவ் வாய்ப்பினைப் பயன்படுத்தி, மதுரை மாவட்டத்தில் நாளது தேதிவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாற்றுத்திறனாளிகள் முதல் மற்றும் இரண்டாம் தவணை எதுவாகினும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இம்முகாமில், கலந்துகொண்டு பயனடையுமாறு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.