மதுரை அருகே சமையல் மாஸ்டர் தற்கொலை: கிரைம் செய்திகள்..
சமையல் மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து மனைவி போலீசில் புகாரளித்துள்ளார்.;
பைல் படம்.
சமையல் மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை
மதுரை அருகே சிலைமான் புளியங்குளம் கேகே நகரை சேர்ந்தவர் கருப்பணன் மகன் சிரஞ்சீவி 40 .இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டது. கண்ணிலும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் மன அழுத்தத்தில் இருந்தவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி யோகலட்சுமி சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சமையல் மாஸ்டர் சிரஞ்சீவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையோர தடுப்பில் பைக் மோதி இளைஞர் உயிரிழப்பு
பேரையூர் வன்னி வேலம்பட்டி ராஜா மகன் ரஞ்சித் குமார் 24 .இவர் டி. கல்லுப்பட்டி திருமங்கலம் ரோட்டில் பைக் ஓட்டிச் சென்றார். இவருக்கு பின்னால் பாபு மகன் சிவ சக்திவேல் 21 அமர்ந்திருந்தார். இவர்கள் சென்ற பைக் டி. புதுப்பட்டி அருகே காலேஜ் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பலகையில் மோதியது.
இதில் நிலை தடுமாறி இருவரும் தலைக்கு புற சாலையோரம் விழுந்தனர் .இதில் வாலிபர் சிவசக்திவேலுக்கு தலையில் படமாக அடிபட்டது.அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த விபத்து குறித்து உறவினர் சசிகாந்த் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிவ சக்திவேலின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் தூக்கிட்டு தற்கொலை
மதுரை எஸ்.கொடிக்குளம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமுத்தாய் 50. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார் .இந்த நிலையில் சம்பவத்தன்றும் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் துடி துடித்தார். இதனால் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவருடைய கணவர் செல்வராஜ் திருப்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராமுத்தாயின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல அனுப்பானடியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
மதுரை, அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோவிந்தன் 54. இவர் லெப்ரசி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். குடிப்பழக்கமும் இருந்தது . இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.இந்த நிலையில் இவர் புது இராமநாதபுரம் ரோடு மாநகராட்சி வாகனம் நிறுத்துமிடம் எதிரே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய தம்பி கண்ணன் கொடுத்த புகாரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளைஞரை வழிமறித்து பைக், செல்போன் பறிப்பு
மதுரை அருகே சம்பக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கணபதி மகன் குருமணி 34. இவர் மதுரை மாட்டுத்தாவ மாட்டுத்தாவணி பைபாஸ் ரோட்டில் மண்டேலா நகர் வழியாக பைக் ஓட்டிச் சென்றார். அப்போது இரண்டு வாலிபர்கள் அவரை வழிமறித்து மிரட்டி தாக்கினர்.அவர்கள் குருமணி ஓட்டிச் சென்ற பைக்கையும் அவரிடம் இருந்த செல்போனையும் பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து குருமணி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பைக் செல்போன் பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.