சோழவந்தான் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல்
சோழவந்தான் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல்;
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் மாநகராட்சி நகராட்சிகள் பேரூராட்சிகள் உள்ளிட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட 7-வது வார்டில், காங்கிரஸ் சார்பாக மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி செல்லப்பா சரவணன், தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உடன், நகர காங்கிரஸ் தலைவர் முத்துப்பாண்டி, தொகுதி ஊடகப்பிரிவுத் தலைவர் வையாபுரி மற்றும் பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.