கூட்டுறவு வங்கி 5 சவரன் நகைக்கடன் விரைவில் தள்ளுபடி: அமைச்சர் அறிவிப்பு!
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை வரை தள்ளுபடி விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.;
தமிழக கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள 5 சவரன் தங்க நகைக்கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகள் அல்லாதோருக்கும் கடன் தள்ளுபடி அளித்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.