சோழவந்தான் பேரூராட்சியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்
Cholavanthan Polio Camp சோழவந்தான் பேரூராட்சியில், போலியோ சொட்டு மருந்து முகாமினை தலைவர் ஜெயராமன் தொடங்கி வைத்தார் .;
Cholavanthan Polio Camp
தமிழகத்தில் முற்றிலும் போலியோவை ஒழிக்கும் விதமாக சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாமானது தொடர்ந்து நடத்தப்படுகிறது. மக்கள் கூடும் இடங்களை மையமாக வைத்து நடத்தப்படும் இந்த முகாமில் அப்பகுதியைச் சார்ந்த ௫ வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக தன்னார்வலர்கள், உட்பட அரசு பணியாளர்களும் களப்பணியாற்றுகின்றனர். இம்முகாம் குறித்து முன்னரே திட்டமிடப்படுவதால் மக்களிடம்நல்ல வரவேற்பை பெற்றுள்ளது-
மதுரை அருகே,சோழவந்தான் பேரூராட்சியில், நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமினை, பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சித் துணைத் தலைவர் லதா கண்ணன், பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின், செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர் பேரூர் செயலாளர், வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், சுகாதார பணியாளர்கள் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர் . அரசு ஆரம்ப சுகாதார நிலைய ராஜ்குமார், சுகாதார மேற்பார்வையாளர் அலுவலர் முத்துராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், இனியகுமார் சதீஷ், விமல், உதவியாளர் கண்ணன், மற்றும் கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல மதுரை மாவட்டத்தில் பல பேரூராட்சிகளில் மற்றும் ஊராட்சிகளில் சிறு குழந்தைகளுக்கு போலீஸ் சொட்டு மருந்து வழங்கப்பட்டது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.