சோழவந்தான், மேலக்கால் பகுதிகளில் காமராசர் பிறந்த தின விழா கொண்டாட்டம்
சோழவந்தான், மேலக்கால் பகுதிகளில் காமராசர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் மேலக்கால் பகுதியில், காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சோழவந்தான் வேப்பமர ஸ்டாப் அருகில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு இந்து நாடார் உறவின்முறை சார்ந்த பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில், அய்யப்பன் நாயக்கன்பட்டி காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி. பி. கந்தசாமி, சோழவந்தான் காமராஜர் உறவின் முறை சங்க செயற்குழு உறுப்பினர் சந்தோஷ்மேலக் கால் நாடார் உறவின் முறை சங்க தலைவர் மணிகண்டன் மற்றும் சோழவந்தனை சேர்ந்த சரவணன் ஐயப்ப ராஜா பாண்டித்துரை மேலக்கால் அழகர் நாகராஜ் பாண்டி பாலா மகளிர் அணி சேர்ந்த சித்ரா மங்கையர்க்கரசி கிருஷ்ண வேணி மல்லிகா மற்றும் இந்து நாடார் உறவின் முறை சேர்ந்த நிர்வாகிகள் பொது மக்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மேலக்கால் நாடார் இளைஞர் பேரவை சார்பில் மேலக்கால், கிராமத்தில் காமராஜர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் நாடார் இளைஞர் பேரவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மதுரை விக்கிரமங்கலம் பகுதியில், கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது . முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விக்கிரமங்கலத்தில் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், விக்கிரமங்கலம் இந்து நாடார் உறவின் முறைத் தலைவர் ராஜேந்திரன், செயல் தலைவர் வையாபுரி, பொருளாளர் ராஜபாண்டியன், செயலாளர் சௌந்தர பாண்டியன், உப செயலாளர் நாகராஜ் என்ற மனோகரன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளி மற்றும் கேரன் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி ஆகிய பள்ளிகளில், பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் ,பேனா உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி,கட்டுரை போட்டி ஓவிய போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.