திருமங்கலம் அருகே கால்வாயை சீரமைக்க கோரிக்கை..!

Update: 2024-08-08 10:29 GMT

கால்வாயை அடித்துக்கிடக்கும் குப்பைக்கூளங்கள். 

திருமங்கலம் நகராட்சியின் அவல நிலை - 27 வார்டுகளிலும் குப்பை கூளங்கள் - கழிவு நீர் வாய்க்கால் சீரமைக்காமல் , துர்நாற்ற கழிவு நீரில் மிதக்கும் 27 வார்டுகள் - நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது/ 

மதுரை:

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சி தலைவராக ரம்யா முத்துக்குமார் உள்ளார். இந்நிலையில், நகராட்சியின் முக்கிய பகுதியாக உள்ள திருமங்கலம் நகர்ப்புற பேருந்து நிலையம் முழுவதும் கழிவு நீரில் மிதக்கிறது . சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லக்கூடிய வழிகள் முழுவதுமாக, நகராட்சி தூய்மை பணியாளர்கள் தங்களது பணிகளை செய்யாமல், இருப்பதுடன், 27 வார்டுகளிலும்சாக்கடைகள் வெள்ளம் என திரண்டு நோய் தொற்று பரவும் அபாயத்தில் உள்ளது .

இதில், வெளியூர் பேருந்து நிலையம் அருகே நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வரும் முக்கிய பேருந்து நிலையமாக இருந்து வரும் நிலையில், அப்பயணிகளுக்கு இயற்கை உபாதைகளை கழிக்க கூடிய இடங்கள் எதுவும் செய்யப்படாமல் உள்ளது .

மேலும்,மழை, மற்றும் வெயில்களில் பயணிகள் தவித்து வருவதுடன், அவர்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வசதி கூட செய்து தரப்படாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இது ஒரு புறம் இருக்க, பேருந்து நிலையத்தில் உள்ள நோய் பரப்பக்கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் கடைகள் இருப்பதுடன், பல்வேறு கடைகள் நகராட்சி இடங்களை ஆக்கிரமித்து நகராட்சிக்கு வருமானத்தை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வருவதுடன் பெரும் தீ விபத்து ஏற்படுத்தக்கூடிய அடுப்புகளை பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் வைத்து தேநீர் மற்றும் வடை தயாரிக்கும் கடைகள் செயல்பட்டு வருகிறது .

இந்நிலையில்,27 வார்டுகளிலும் நோய் தொற்று பரவக்கூடிய குப்பை கூளங்களும், தூய்மை பணியாளர்கள் செயல்படாமல் இருப்பதால், வீடுகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவு நீர் அகற்றப்படாமல், சாலையில் கழிவு நீர் வெள்ளம் போல் ஆங்காங்கே சூழ்ந்து கொசுக்கள் மற்றும் வைரஸ் நோய் பரவும் நிலைக்கு  திருமங்கலம் நகராட்சி வார்டுகள் தள்ளப்பட்டு அவல நிலையை காண்கின்றது.

இது குறித்து, திருமங்கலம் பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை செவிசாய்க்கப்படாமல் மெத்தனப் போக்கில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம சாட்டுகின்றனர். மேலும், நகராட்சி தலைவர் ஆளுங்கட்சி சார்ந்தவராக இருப்பதால், மக்கள் குறைகளை செவிசாய்க்காமல்,சுய லாபத்திற்காக வருமானத்தை மட்டுமே எதிர்நோக்கி பணியாற்றி வருவதாக திருமங்கலம் நகர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே அத்து மீறி அனுமதியின்றி இரு சக்கர வாகனங்கள் காப்பகம் வைத்து தனிநபர்கள் செயல்பட்டு வருவது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நெரிசலான வாகனப்போக்குவரத்தும் ஏற்படுகிறது.

Tags:    

Similar News