மதுரையில் வீட்டுக்கதவை உடைத்து ரூ. 15 லட்சம் திருட்டு: போலீஸார் விசாரணை
மதுரையில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடு பட்ட 11 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்;
மதுரை தாசில்தார் நகரில் வீட்டின் கதவை உடைத்து ரூ.15 லட்சம் திருட்டு
மதுரைஅண்ணாநகர் தாசில்தார்நகர் நேருநகரை சேர்ந்தவர் செல்வம்46.இவர் குடும்பத்துடன் வெளியூர்சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ15 லட்சத்தை மர்ம ஆசாமி கொள்ளைஅடித்துச் சென்றது தெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து செல்வம் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ15லட்சம் கொள்ளை அடித்த ஆசாமியை தேடி வருகின்றனர்.
கூடல் நகர் பாலத்துக்கு அடியில் வாள், கத்தி ,மிளகாய் பொடி, ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஆறு பேர் கைது:
மதுரை செல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கூடல்நகர் பாலம் அடியில் சென்ற போது சந்தேகப்படும்படியாக நினற் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர் .அவர்களில் ஆறு பேர் இருந்தனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது அவர்களிடம் வாள ஒன்று, பெரிய கத்தி ஒன்று, மரக்கட்டை, கயிறு ,மிளகாய் பொடி பாக்கெட்டுகள், இருந்தன அவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரித்தனர்.
அவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் திட்டத்தில் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. மீண்டும் விசாரித்த போது அவர்கள் பெரத்தானியாபுரம் சுந்தரராயர் தெரு முருகன் மகன் சூர்யா( 24 ),திடீர் நகர் மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிவக்குமார் மகன் பிரகாஷ்( 23,) பெத்தானியாபுரம் மேட்டு தெரு கருப்பசாமி மகன் அசோக்குமார்( 22,) வி.கரிசல்குளம் நேருநகர் பெருமாள் மகன் பாலகிருஷ்ணன்( 25,) கள்ளிக்குடி அத்தப்பட்டி சுந்தர்ராஜ் மகன் அருண்குமார்( 19,) ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு காலனி ஜெயக்குமார் மகன் மனோஜ் குமார்( 29 ) என்று தெரிய வந்தது .அவர்கள் ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதிச்சியம் பகுதியில் சாலையை மறித்து இடையூறாக மணல் கொட்டி வியாபாரம்: நான்கு பேர் கைது
மதுரை. மதிச்சியம் பகுதியில் சாலையை மறித்து பொதுமக்களுக்கு இடையூறாக மணல் கொட்டியும் பல்வேறு வியாபாரங்கள் செய்தும் இடையூறு செய்ததாக மதிச்சியம் போலீசார் ஆறு பேரை கைது செய்தனர். மதிச்சியம் வைகை வடகரையை சேர்ந்த ராஜா மனைவி மீனா 38, புது மீனாட்சி நகர் தமிழன் தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் பழனிகுமார்( 36,) அதேபகுதியைச் சேர்ந்த இருளப்பன் மகன் கிஷோர் குமார்( 26 ),ஆண்டி மகன் செந்தில்குமார்(40) ஆகியோரைபோலீசார் கைது செய்தனர்.
ஆனையூரில் கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறி: வாலிபர் கைது
மதுரை.கொன்னவாயன் சாலை அன்னை வேளாங்கண்ணி தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து மகன் சேசுராஜா 32. இவர் ஆனையூர் மந்தை அம்மன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தார். அவரை கரிசல்குளம் ஐயங்காளை மகன் தர்மராஜ் என்ற பட்டாசு( 25 )என்ற வாலிபர் கத்திமுனையில் மிரட்டி சேசுராஜாவிடமிருந்து ரூ.400-ஐ வழிப்பறி செய்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து ஜேசுராஜா கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் தர்மராஜை கைது செய்தனர்.