திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் ரத்ததான முகாம்
விவேகானந்த கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.;
விவேகானந்த கல்லூரியின் இரத்த தான மையம், நாட்டு நலப்பணித் திட்டம் , தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம், சென்சுருள் சங்கம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையம், மேலக்கால் இணைந்து விவேகானந்த கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
கல்லூரியின் முதல்வர் தி. வெங்கடேசன் தலைமை வகித்தார். குருகுல ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச.சந்திரசேகரன் வரவேற்றார். வாடிப்பட்டி வட்ட சுகாதார ஆய்வாளர் சி.ராமகிருஷ்ணன், நாட்டுநலப் பணித்திட்ட மண்டல இயக்குனர் சாய்ராம் ஆகியோர் வாழ்த்தினர்.
நாட்டுநலப் பணித்திட்ட மாநில திட்ட அலுவலர் எம்.செந்தில் குமார், மதுரை காமராசர் பல்கலைக் கழக நாட்டுலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம்.பாண்டி, டாக்டர் பி.ஆர். ஹரி பிரசாத், டாக்டர் சத்திய ராணி, பி.முத்துராஜ் , சி.ராஜேஷ், சி. பிரபாகரன், என்.இனிய குமார், பி.சதீஷ் , கே.மலர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.
முனைவர் கே. காமாட்சி, கேப்டன் வி. ராஜேந்திரன், முனைவர் ஜி.அசோக் குமார் முனைவர் கேரமேஷ் குமார், எம்.ரகு, முனைவர் ஜி ராஜ்குமார், முனைவர் என்.தினகரன், முனைவர் ஏ.சதீஷ் பாபு, முனைவர எம்.கணபதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 30 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். நிறைவாக நாட்டு நல பணி திட்ட அலுவலர் முனைவர் ரமேஷ் குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை இரத்ததான மைய ஒருங்கிணைப்பாளர் காமாட்சி தொகுத்து வழங்கினார்.