மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு வழக்கறிஞர் பாதுகாப்பு சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்

Update: 2023-03-28 09:00 GMT

மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  பாஜக வழக்கறிஞர்கள் 

மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு  மதுரை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஐயப்ப ராஜா தலைமை  வகித்தார். துணைத்தலைவர் அருண் தமிழரசன், பொறுப்பாளர் அமிழ்தன் ஆகியோர் வரவேற்றனர்.

மாநிலச்செயலாளர் பால்பாண்டி கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.  ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் மீதான தொடர் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்.

சென்னை பெருங்குடியில் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ஜெய் கணேஷ் குடும்பத்திற்கு, தமிழக அரசு ரூபாய் ஒரு கோடி நிதி வழங்க வேண்டும். தமிழக அரசு வழக்கறிஞர் பாதுகாப்பு சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஜெயதேவன், ஜெய முருகன் ,சந்திரமோகன், வடிவேலன், சுந்தரவடிவேல் உள்பட 100 -க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

கொலையாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்தபோது வழக்கறிஞர்கள் போராட்டம்:

சென்னை, பெருங்குடி ராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ்(33). சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 25 -ஆம் தேதி, வீட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் ஜெய்கணேஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில், 3 இளைஞர்கள், விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தபோது, அவர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தினார்கள். சென்னை பெருங்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்கணேஷ், கடந்த 25-ஆம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த, கொலை வழக்கில் தொடர்புடைய நுங்கம்பாக்கத்தை சேர்ந்த மீன் பிரவீண், முருகன், ஸ்ரீதர் ஆகிய 3 பேரும் விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர். அவர்கள் 3 பேரையும் வரும் 5-ஆம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி ராதிகா உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் போலீசார், பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் இருந்து வேனில் அழைத்துச் சென்றனர். அப்போது அவர்களை கண்டித்து வழக்கறிஞர்கள் முழக்கம் எழுப்பியதோடு, கல்வீசி தாக்குதல் நடத்தினர்.


Tags:    

Similar News