அவனியாபுரம் மீனாட்சியம்மன் ஆலய பூப்பல்லக்கு: பக்தர்கள் தரிசனம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை நடைபெறுகிறது;

Update: 2023-05-03 08:30 GMT

அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா பூப்பல்லாக்கு நடைபெற்றது.

அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா பூப்பல்லாக்கு நடைபெற்றது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை நடைபெறுகிறது. 6ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர்களின் பழமைவாய்ந்த கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் இன்று காலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை வெள்ளையானை வாகனத்திலும் அலங்கரிப்பட்ட பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும் அவனியாபுரம் பகுதியில் உள்ள பெரியசாமி நகர், திருப்பதி நகர், செம்பூரணி ரோடு, மார்கண்டேயன் கோயில் தெரு வீதிகளில் வலம் வந்தனர். ஆயி கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்களின் ஹரஹர மகாதேவ கோசத்துடன் பூப்பல்லாக்கு நடைபெற்றது. திருக்கோயில் செயல் அலுவலர் திருமதி சங்கரேஸ்வரி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags:    

Similar News