மதுரையில் ஆட்டோ கன்சல்டிங் உரிமையாள ரைத் தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்
சிம்மக்கல்லில் ஆட்டோ கன்சல்டிங் உரிமையாளர் மீது தாக்குதல்: ஆட்டோ டிரைவர் கைது:
மதுரை டிசிம்மக்கல்லில் ஆட்டோ கன்சல்டிங் உரிமையாளர் மீது கொலைவெறிதாக்குதலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரை போலீசார் செய்து செய்தனர். சிம்மக்கல் எல் என் பி கிழக்கு தெருவை சேர்ந்தவர் அருணகிரி 60. இவர் அனுமார் கோவில் படித்துறையில் ஆட்டோ கன்சல்டிங் நடத்தி வருகிறார். இவரிடம் திருமலைராயர் படித்துறையை சேர்ந்த முருகானந்தம் 56 என்பவர் ஒரு வருடத்திற்கு முன்பாக ஆட்டோ ஒன்றை வாங்கினார் .பின்னர் அதை திருப்பி கொடுத்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவரது நிறுவனத்திற்கு சென்ற முருகானந்தம் அருணகிரியை ஆபாசமாக பேசி கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அருணகிரி திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஆட்டோ டிரைவர் முருகானந்தத்தை கைது செய்தனர்.
பணம் கொடுக்காமல் மீன் கேட்டு வியாபாரியை தாக்கிய ஒருவர் கைது:
மதுரை, புது ராம்நாடு ரோடு தமிழன் தெருவை சேர்ந்தவர் பாண்டி மகன் செல்வம்( 38.). இவர் கேட்லாக் ரோடு சந்திப்பில் பொறித்தமீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடைக்கு வந்த கார்த்திகேயன் என்ற லலிதா ராணி 42 என்பவர் பணம் கொடுக்காமல் இலவசமாக மீன் கேட்டுள்ளார். அதற்கு செல்வம் மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த கார்த்திகேயன் செல்வத்தை ஆபாசமாக பேசி கல்லாலும் கையாளும் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து செல்வம் கொடுத்த புகாரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய கார்த்திகேயனை கைது செய்தனர்.
மதுரை, ஆரப்பாளையம் மஞ்சள் மேடு மினி காலனியை சேர்ந்தவர் பாண்டியம்மாள் 67. அதே பகுதியை சேர்ந்தவர் மதுரை வீரன் மகன் திருநாவுக்கரசு 25. இவருக்கும் பாண்டியம்மாளின் சகோதரர்களுக்கும்இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அதே பகுதியில் டீக்கடை முன்பாக சென்ற பாண்டியம்மாளின் தம்பியை திருநாவுக்கரசு ஆபாசமாக பேசி தாக்கினார். இந்த சம்பவம் குறித்து பாண்டியம்மாள் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தம்பியை தாக்கிய வாலிபர் திருநாவுக்கரசுவை கைது செய்தனர்.
மதுரை, காளவாசல் விபி சித்தன் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்( 48.) இவர் காளவாசலில் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இங்கு பாண்டியன் நகரை சேர்ந்த பெரிய மணி மகன் சரவணன் என்ற குண்டு சரவணன் 37 குடிபோதையில் கடைக்கு வந்தார்.அவர் கடையில் இலவசமாக அல்வா கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த சரவணன் ஆபாசமாகபேசி அங்கு இருந்த பேக்கரிபொருட்களை சூறையாடினார். இந்த சம்பவம் குறித்து வெங்கடேஸ்வர் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பேக்கரி பொருட்களை சூறையாடிய சரவணனை கைது செய்தனர்.
மதுரை, தத்தனேரி பாக்கியநாதபுரம் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபநாசம் மகன் ஜெகன்( 27.) இவருக்கு அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் இருந்தது. இதற்காக குடியை மறக்க சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென்று கூட நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஜெகன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை, கீரைத்துரை போலீசார் அனுப்பானடி ரோடு சந்திப்புபகுதியில் ரோந்துப்பணியில்.ஸ ஈடுபட்டிருந்தனர் அவர்கள் பிஎஸ்என்எல் ஆபீஸ் அருகே சென்றபோது போலீசை கண்டதும் வாலிபர் ஒருவர் பதுங்கினார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ராமசாமி மகன் கார்த்திக் என்ற கூலு கார்த்திக்(32 ) என்று தெரிய வந்தது. அவரை சோதனை செய்தனர் சோதனையில் அவர் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.அதை பறிமுதல்செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொலை செய்யும் திட்டத்தில் அங்கு பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவர் யாரை கொலை செய்ய பதுங்கி இருந்தார் அல்லது வேறு காரணத்திற்காக பதுங்கி இருந்தாரா என்பது குறித்து தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெற்கு வாசல் பகுதியில்35 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டில் பறிமுதல்-வாலிபர் கைது :
மதுரை, தெற்கு வாசல் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தெற்கு வெளி வீதி பாண்டி விநாயகர் கோவில் தெருவில் சென்ற போது அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் அந்த பகுதியை கண்காணித்தபோது பாண்டி விநாயகர் கோவில் தெருவில் துரைப்பாண்டி மகன் விக்னேஷ்( 26 ) என்பவர் இந்த பாக்கெட்டுகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் விற்பனை செய்த கடையில் சோதனைநடத்தினர். அங்கு புகையிலை 27 கிலோ, கூல் லிப்ஸ் புகையிலை எட்டு கிலோ மொத்தம் 35 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விற்பனை செய்த வாலிபர் விக்னேஷை கைது செய்தனர்.
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் 23 பவுன் தங்க நகைகளை வழிப்பறி செய்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.நாராயணபுரம் பேங்க் காலனியை சேர்ந்தவர் சுகுணா( 46.). இவர் கிருஷ்ணாபுரம் காலனி சந்திப்பில் பழைய நத்தம் ரோட்டில் டூ வீலர் ஓட்டிச் சென்றார். அவரை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற இரண்டு ஆசாமிகள் அவர் அணிந்திருந்த பதினொன்னரை பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இந்த செயின்பறிப்பு சம்பவம் தொடர்பாக சுகுணா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின் பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரை கோர்ட்ஸ் பாலத்தில் செயின் பறிப்பு:
துரைசாமி நகர் வேல்முருகன் நகர் வைகை குறுக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் மனைவி மாரீஸ்வரி(45.) இவர் மதுரை கோட்ஸ் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து சென்ற இரண்டு பைக் ஆசாமிகள் அவர் அணிந்திருந்த ஐந்தே முக்கால் பவுன் தங்கச் செயினை பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து மாரீஸ்வரி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின்பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
தனக்கன்குளத்தில் வீட்டை உடைத்து நகை திருட்டு:
தனக்கன்குளம் ஆனந்த நகரை சேர்ந்தவர் வளர்மதி( 60.). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார் .பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்து அஞ்சே முக்கால் பவுன் தங்க நகையை திரு சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து வளர்மதி திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடி ஆசாமி தேடி வருகின்றனர். மதுரையில் பல்வேறு இடங்களில் மொத்தம் 23 பவுன் நகை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.