வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
வாடிப்பட்டியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
வாடிப்பட்டியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில் ஆர்.பி. உதயகுமார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதி.மு.க சார்பாக அண்ணா பிறந்த நாள் விழா வாடிப்பட்டி பஸ் நிலை யத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங் கி கொண்டாடப்பட்டது. இந்த விழா விற்கு முன்னாள் அமைச்சர், மாவட் டச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்கி அண்ணா சிலை க்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
அமைப்புச் செயலா ளர் மகேந்திரன், முன்னாள் எம்.எல். ஏ.,க்கள் கருப்பையா, மாணிக்கம், சரவணன், பேரவை மாநில துணை ச் செயலாளர்கள் ராஜேஷ் கண்ணா,துரை தன்ராஜ், வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன் காளிதாஸ், கணேசன், ராதாகிருஷ் ணன், மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் அசோக்குமார் வரவேற்றார்.
இதில் பேரூர் துணைச் செயலாளர் சந்தனதுரை, மன்றச் செயலாளர் முத்து கண்ணன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் லட்சுமி, பாசறை மாவட்ட துணை செயலாளர் மணிமாறன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பொன் ராமன், சரவணன்,வார்டு செயலாளர்கள் திருப்பதி, ரங்கராஜ், மாணவரணி செயலாளர்விஜய் பாபு, நிலா மோகன், ரவி அழகுராஜா, கபாலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பேரூர் பேரவை செயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.