வாடிப்பட்டி அருகே சித்தர் பீடத்தில் அன்னதானம்

Update: 2023-08-08 02:30 GMT

வாடிப்பட்டி அருகே சித்தர் பீடத்தில் நடைபெற்ற அன்னதானம்.

வாடிப்பட்டி அருகேயுள்ள சாணம்பட்டி பதினெண்சித்தர்பீடத்தில் பதினெட்டாம் பெருக்கு அன்னதானம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன்கோட்டை சாணாம்பட்டியில் சிறுமலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த சிறுமலை ஓடைகரையில் பதினெண் சித்தர்பீட ஆலயத்தில், பதினெண் சித்தர்பீட அறக்கட்டளை சார்பாக, பதினெட்டாம் பெருக்கையொட்டி யாகசாலை சிறப்பு பூஜையும், சித்தர்பீடத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

மதியம் அன்னதானமும், இலவச அக்குபஞ்சர், சித்தா, ஆயுர்வேதிக் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை முகாமும் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, திருவள்ளுவர்இலக்கிய மன்றத் தலைவர் சு.தனபாலன் தலைமை வகித்தார். மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் கே.என்.நாகராஜன், அன்னதானத்தை தொடக்கி வைத்தார். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தகாரர் செந்தில்குமார், மருத்துவ முகாமினை தொடக்கி வைத்தார். விவசாய விஞ்ஞானி சி.ஆர்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நிர்வாக அறங்காவலர் பெ.விஜயபாஸ்கர் வரவேற்றார்.

இந்த மருத்துவ முகாமில், மருத்துவர்கள் லிங்குசெல்வி தலைமையில் டாக்டர்கள் தம்பிதுரை, ஜோதிமுனீஸ்வரி, வித்யா உள்ளிட்ட மருத்துவகுழுவினர் மூட்டுவலி, முதுகுவலி, தலைவலி, கால்ஆணி, சொரியாசிஸ், சளி, ஆஸ்துமா, சர்க்கரை உள்பட அனைத்துவகை நோய்களுக்கும் மருத்துவசிகிச்சையளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர். முடிவில், கூட்டுறவு சங்கத்தலைவர் பொன்ராம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News