மத்தியபிரதேசத்தில் நடந்த அகில இந்திய மேயர் கவுன்சில் : மதுரை மேயர் பங்கேற்பு

பர்கான்பூரில் நடைபெற்ற 52 வது அகில இந்திய கவுன்சில் பொதுக்குழுக்கூட்டத்தில் மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் பேசினார்;

Update: 2023-03-16 11:06 GMT

மத்தியபிரதேசம் பர்கான்பூரில் நடைபெற்ற 52வது அகில இந்திய மேயர் கவுன்சில்பொதுகுழுக் கூட்டத்தில் பங்கேற்ற மேயர் இந்திராணி பொன்வசந்த்

மத்தியபிரதேசம் பர்கான்பூரில் 13.03.2022 மற்றும் 14.03.2023 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற 52வது அகில இந்திய மேயர் கவுன்சில் பொதுகுழுக் கூட்டத்தில் ,மதுரை மாநகராட்சியின் சார்பாக மேயர் இந்திராணி பொன்வசந்த் பங்கேற்றார்.

அதில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆற்றிய உரை : இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றான  மதுரை மாநகரின் சார்பில் இந்த  தேசிய மேடையில் செழுமையான கலாசார பாரம்பரியத்துடன் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன்.

மதுரை மாநகரில் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மேலும் மதுரை மாநகரம் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலைக் கொண்ட கோவில் நகரம் என்று அழைக்கப் படுகிறது.    இந்தியாவில் உள்ள 100 ஸ்மார்ட் நகரங்களில் மதுரை மாநகரும் ஒன்றாகும். கடந்த ஓராண்டில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், குடிநீர் வழங்குதல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளோம். மேலும், சுகாதாரம், ஆரோக்கியம், தூய்மை ஆகியவை நமது முதன்மையான முன்னுரிமைகள் ஆகும்.

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் குழந்தைகளின் மேம்பாடு,கல்வி வசதிகள் ஆகியவற்றிலும் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறோம். 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவிற்காக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மதுரையில்,தொடங்கி வைத்தார்கள். இந்தியாவிலேயே தொடக்கப் பள்ளிகளில் காலை உணவை வழங்கும் முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

100 ஆண்டுகள் பழமையான திராவிட வரலாற்றைப் பெற்றுள்ளோம். அது பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது என்பதையும் திராவிட இயக்கத்தின் தலைசிறந்த தந்தை பெரியார் நம் அனைவருக்கும் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தவர் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.நமது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகம் செய்து அனைத்து தரப்பு பெண்களுக்கும் வாய்ப்புகளை வழங்கி உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். பொதுமக்களுக்கு சேவை செய்ய எனக்கு அளித்த  வாய்ப்புக்கு  நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

அறிவுப் பகிர்வு மற்றும் கலந்துரையாடல் மற்றும் பல்வேறு சிக்கல்கள் , பல்வேறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் புதுமையான நடைமுறைகள் போன்றவற்றைப் பற்றி ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதில் உள்ள ஆற்றலை நான் நம்புகிறேன். இது நகரங்களுக்கிடையே சாத்தியமான ஒத்துழைப்பிற்கு வழி வகுக்கும் மற்றும் நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கும்.

நமது குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். மத்தியபிரதேசம் பர்கான்பூர் நகரில் நடைபெற்ற 52வது பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ததற்காக அகில இந்திய மேயர் கவுன்சிலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்  என்றார் மதுரை மேயர் இந்திராணிபொன்வசந்த். தொடர்ந்து, பர்கான்பூர் நகர் மற்றும் பிற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து  பார்வையிட்டனர்.

Tags:    

Similar News