தமிழக அரசைக் கண்டித்து, சோழவந்தானில் அதிமுக ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர்!

தமிழக அரசைக் கண்டித்து, சோழவந்தானில் அதிமுக ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர்!;

Update: 2024-02-01 09:40 GMT

சோழவந்தானில், திமுக அரசை கண்டித்து, முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்:

சோழவந்தான்:

பட்டியலிபெண் மீது, வன்கொடுமை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், சோழவந்தான் பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, வாடிப்பட்டி யூனியன் தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா வரவேற்புரை ஆற்றினார்.

ஒன்றியச் செயலாளர்கள் வாடிப்பட்டி தெற்கு கொரியர் கணேசன், வடக்கு மு காளிதாஸ், அலங்காநல்லூர் ரவிச்சந்திரன் ,மதுரை மேற்கு அரியூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டியலின பெண்

மீது வன்கொடுமை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன் ,எஸ் .எஸ். சரவணன் ,நீதிபதி, தவசி ஆகியோர் திமுக அரசை கண்டித்து பேசினார்கள்.

இதில், மாநில மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் திருப்பதி, வெற்றிவேல் ,துரை தன்ராஜ் ,ஏ .கே .பி. சிவசுப்பிரமணி, கபி காசி மாயன், இலக்கிய அணி ரகு, மகேந்திர பாண்டி விவசாய பிரிவு ராம்குமார்,

மாவட்டக் கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், லட்சுமி ,வனிதா, ஒன்றியச் செயலாளர்கள் செல்லம்பட்டி எம். வி. பி ராஜா அன்பழகன் , ஒன்றியக் கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, தென்கரை ராமலிங்கம், பொதுக்குழு நாகராஜ், சோழவந்தான் பேரூர் கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, சரண்யா கண்ணன், வசந்தி, கணேசன், மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, சோழவந்தான் பேரூர் இளைஞர் அணி கேபிள் மணி, தண்டபாணி, பேரூர் துணைச் செயலாளர் தியாகு ,சிவா, அசோக், மேலக்கால் காசிலிங்கம், நாச்சிகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் சுகுமாறன்,

விவசாயப் பிரிவு வாவிட மருதூர் குமார், மாவட்ட பிரதிநிதி அலங்கை முரளி, மற்றும் அதிமுகவின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரூர் செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News