அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகள் முன்பு, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!
அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகள் முன்பு, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!
அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சி முன்பாக சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்:
அலங்காநல்லூர், அக்.8.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சி முன்பாக ஆளும் திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர செயலாளர்கள் அழகுராஜ், குமார், அம்மா பேரவை துணைச் செயலாளர் மனோகரன், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக ஆட்சியில் கொண்டு
வரப்பட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டத்தை முடக்கிய மக்கள் மீது அக்கறை இல்லாத திமுக அரசை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர். தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, குடிநீர், கழிவுநீர் கட்டண உயர்வு, பொதுமக்கள் மத்தியில் போதை பொருட்கள் புழக்கம், வின்னை முட்டும் விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுகவினர் பேரூராட்சி முன்பாக கண்டன கோசங்களை எழுப்பி மனித சங்கிலி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டானர்.
இதில், ஒன்றிய துணைச் செயலாளர் சம்பத், தகவல் தொழில் நுட்ப அணி செந்தில், நிர்வாகிகள் சுந்தராகவன், சரவணன், ஜெகதீஷ்வரன், கேட்டுக்கடை முரளி, ஆறுமுகம், அய்யூர் நடராஜன், செந்தில்குமார், மகளிரணி புளியம்மாள், லதா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.