அலங்காநல்லூர் தேசிய கூட்டு சர்க்கரை ஆலையை இயக்கக் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லூர் தேசிய கூட்டு சர்க்கரை ஆலையை இயக்கக் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-08-31 17:30 GMT

தேசியக் கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க கோரி  அதிமுக ஆர்ப்பாட்டம்.

அலங்காநல்லூர் தேசிய அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 2019 2020 ஆம் ஆண்டில் கொரோனா காலகட்டத்தில் ஆலையின் அரவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தற்போது,இந்த ஆலை இயங்காமல் உள்ளது .இதன் காரணமாக ஆலை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 30 மாத சம்பளம் பாக்கிதொகை வழங்கப்படவில்லை.

அதேபோல், ஆலயம் நிர்வாக செலவிற்காக வழங்கப்பட வேண்டிய தொகை 27 கோடி ஒதுக்கப்படவில்லை என்று இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.தொடர்ந்து, மதுரை மாவட்ட பகுதியில் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை அரவை பகுதியில் எத்தனை ஏக்கர் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் மூலம் ஆலை நிர்வாகத்தினர் கணக்கெடுப்பு செய்ய வேண்டும். தொடர்ந்து, இயங்காமல் உள்ள காரணத்தினால் தென் மாவட்டத்தின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது .

அதேபோல், இந்த ஆலையை நம்பி கரும்பு பயிர் செய்த விவசாயிகள் மிகவும் பின்தங்கி உள்ளதாக ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

மேலும் ,இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:

தென் மாவட்ட விவசாய பெருமக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அலங்காநல்லூர் தேசிய கூட்டு சர்க்கரை ஆலைஇது போன்ற, ஒரு ஆலையை இனிவரும் காலங்களில் புதிதாக நிர்மானிக்க முடியாது. எனவே, இருக்கின்ற கூட்டுறவு ஆலையை தமிழ்நாடு அரசு விரைந்து திறந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு தொழில்களை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் இயங்காமல் உள்ள தொழில் நிறுவனங்களை இயக்க வேண்டும். குறிப்பாக, அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை இயக்குவதற்கு போர்க்கால அடிப்படைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும், இனிவரும் மூன்று மாத காலங்கள் தமிழ்நாடு அமைதியாக இருக்கும் அதேபோல் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள பொறுப்பாளர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் எனவே, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய கல்வி நிதி ,தொழில் நிதி, ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நலத்திட்டங்களைமத்திய அரசு உடனடியாக விடுவித்திட தற்போதைய தமிழக பாஜக தலைவர்கள் முன்னெடுப்பு செய்ய வேண்டும்.

அண்ணாமலை போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லாத காரணத்தினால் பாஜக தொண்டர்கள் இன்னும் சிறிது காலத்திற்கு நிம்மதியாக இருப்பார்கள். புதிய கல்விக் கொள்கை திட்டத்தை காரணம் காட்டி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை நிறுத்தி வைக்காமல், கல்வி பணிக்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவும், மத்திய அரசு நிதியை உடனடியாக வழங்க தற்போதைய பாஜக தலைவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார்.

மேலும், அலங்காநல்லூர் சர்க்கரை இயக்குவதற்கு தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான முறையான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ,முன்னாள் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு ஆலை தலைவரும் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மேட்டுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தீபா நந்தினி மயில்வீரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழரசன், மாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொழிற்சங்க தலைவர் முருகன் உள்ளிட்ட ஆலய தொழிலாளர்கள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News