மதுரையிலுள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள்மரியாதை

அதிமுக தலைமையின் அறிவிப்பின்படி முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்

Update: 2021-10-30 06:45 GMT

மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அதிமுகவினர்

மதுரை கோரிப்பாளையத்திலுள்ள  தேவர் சிலைக்குஅதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செய்தனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப் பாளர்கள் ஆணைக்கிணங்க தலைமைக்கழக அறிவிப்பின்படி மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், காமராஜ், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் ,டாக்டர் சி. விஜயபாஸ்கர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

Tags:    

Similar News