சோழவந்தான் அருகே சாலை பணிக்காக கால்வாயை மூடியதால் விவசாயம் பாதிப்பு
சோழவந்தான் அருகே சாலை பணிக்காக கால்வாயை மூடியதால் விவசாயம் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் புகார் கூறினார்கள்.
சோழவந்தான் அருகே கால்வாயை மூடியதால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் கூறி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே சாலை பணிக்காக கால்வாயை மூடியதால் 400 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முல்லை ஆற்று கால்வாயில் நாச்சி குளத்தில் மடையில் இருந்து வெளியேறும் நீரானது பொம்மபன் பட்டி ,கணேசபுரம், அம்மச்சியாபுரம், கருப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மொம்மபன் பட்டி முதல் கணேசபுரம் வரை வயல் வெளிகளுக்கு நடுவே உள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்த போது , அருகில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள கால்வாயை மூடி சாலை அமைத்து விட்டனர்.
இதனால், பெரியார் கிளை கால்வாயில் இருந்து இரண்டு போக சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காததால், இந்த பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்ய போதிய நீரின்றி சிரமப் படுகின்றனர். மேலும் விவசாய பணிகளுக்காக மோட்டார் பம்பு மூலம் தொலை தூரங்களிலிருந்து, விவசாயத்திற்கு தண்ணீர் வாங்கி வர வேண்டிய சூழ்நிலை உள்ளதால், விவசாயம் செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் கூடுதல் செலவுகள் ஏற்படுவதாகவும், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர் வெட்சர்கான் உள்படபலர் வேதனை தெரிவித்தனர்.
ஆகையால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு செய்து சாலை அருகே இருந்த கால்வாயை மீண்டும் சரி செய்து விவசாய பணிகளுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.