சோழவந்தான் அருகே விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள் வழங்கும் விழா..!
சோழவந்தான் அருகே,விவசாயிகளுக்கு, வேளாண்மை பண்ணைக் கருவிகளை வேளாண்மை இணை இயக்குனர் வழங்கினார்;
சோழவந்தான் அருகே,விவசாயிகளுக்கு, வேளாண்மை பண்ணைக் கருவிகளை வேளாண்மை இணை இயக்குனர் வழங்கினார்
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வேளாண்மை கோட்டம், சோழவந்தான் அருகே நெடுங்குளம் ஊராட்சியில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பண்ணை கருவிகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் மற்றும் கருத்தரங்கு நடந்தது.
இந்த கருத்தரங்கிற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். வேளாண் மை இணை இயக்குனர் சுப்புராஜ், மாநில அரசு மற்றும் மத்திய அரசு திட்டங்கள் மூலம் செயல்படுத் தப்படும் மானியத் திட்டங்கள் பற்றிய எடுத்துக் கூறி விவசா யிகளுக்கு கடப்பாறை மண்வெட்டி கதிர் அரிவாள் கொத்துவாள் மற்றும் இரும்பு தட்டு அடங்கிய வேளாண்மை பண்ணை கருவிகளை வழங்கினார்.
இந்த கருத்தரங்கில், வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி, வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மானிய விலையில் வழங்கப்படும் இடு பொருட்கள் பற்றி பேசினார். வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் அமுதன், விவசாயிகள் விவரங்கள் பதிவேற்றம் பாரத பிரதமரின் விவசாயிகளின் உதவித்தொகை மன்னுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் மானிய விலையில் விநியோகிக்கப்படும் தக்கை போன்று பற்றி விளக்கி பேசினார். துணை வேளாண்மை அலுவலர் பெருமாள், வேளாண்மை உருவாக்க மையத்தில் உள்ள இடுபொருட்கள் மற்றும் உயிர் உரங்கள் பயன்பாடு பற்றி பேசினார்.
சமூக பொறுப்பு அலுவலர் சுஜின், பரவை ஜி எச் சி எல் மீனாட்சி மில் அறக்கட்டளை சார்பாக விவசாயிகளுக்கு, வேளாண் பண்ணை கருவிகள் வழங்கிட,நிதி உதவி மற்றும் தத்தெடுப்பு ஊராட்சி விவசாயிகளுக்கு, செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விளக்கி பேசினார். முன்னதாக, முள்ளிப்பள்ளத்தில், தக்கை பூண்டு விதைத்த வயல்களையும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மானியம் விநியோகம் செய்த பவர் டில்லர் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முடிவில், உதவி வேளாண்மை அலுவலர் தங்கையா நன்றி கூறினார்.
இதன் ஏற்பாடுகளை, உதவி வேளாண்மைை அலுவலர் விக்டோரியா செலஸ்,வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரியா, உதவி தொழில் நுட்ப மேலாளர் அருணா தேவிி ஆகியோர் செய்திருந்தனர்.