சோழவந்தான் சந்தனமாரியம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா ஏற்பாடுகள்..!
சோழவந்தான் சந்தன மாரியம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடும்விழா நடந்தது.;
சோழவந்தான் சந்தன மாரியம்மன் கோயில் ஆடிப்பெரும் திருவிழா முகூர்த்தக்கால் நடும்விழா நடந்தது.
சோழவந்தான்:
மதுரை,சோழவந்தான் பூக்குழி மைதானத்தில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் ஆடி மாத திருவிழாவின் தொடக்கமாக முகூர்த்த கால் நடும் விழா நடைபெற்றது. ஆடி மாதத்தில் வரும் ஐந்து வெள்ளிக்கிழமைகளிலும் பொதுமக்களுக்கு கூழ்ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும். ஆடி கடைசி வெள்ளி அன்று அக்னிச்சட்டி பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். இதற்கான முகூர்த்த கால் இன்று காலை நடப்பட்டு விழா தொடங்கப்பட்டது. இதில், சங்கங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்திரன், கண்ணதாசன்,ராஜா,மருது, மாரி செல்வம், பூங்கொடி, கஸ்தூரிஉள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் ,ஆடி வெள்ளிக்கிழமையில் ,இங்குள்ள அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடும் கூழ் காய்ச்சி, ஊற்றுதுதல் என்ற வைபவம் நடைபெறும். அத்துடன் பக்தர்கள் ,அம்மனுக்கு மஞ்சள் பால் போன்ற சிறப்பு அபிஷேகங்கள் செய்வது வழக்கம் .மதுரை மேலமடை ,அண்ணா நகர், தாசில்தார் நகர் பகுதியில் உள்ள சௌபாக்கிய விநாயகர் சித்தி விநாயகர் வர சித்தி விநாயகர் உள்ளிட்ட கோயில்களில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று ,
பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.