மதுரை ரயில் நிலையம் அருகே ரயில் பெட்டி தடம் விலகியதால் பரபரப்பு
மதுரை ரயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று தடம் விலகிய ரயில் பெட்டியை உடனடியாக சீரமைக்கப்பட்டது;
மதுரை ரயில் நிலையம் அருகே ரயில் பெட்டி தடம் விலகியது.
மதுரை ரயில் நிலையம் அருகேகாலியாக இருந்த பெட்டியை போடி லைன் பகுதியில் நிறுத்தி வைப்பதற்காக கொண்டு வந்த போது, தண்டவாளத்தில் இருந்து தடம் விலகியுள்ளது.
பெட்டி மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணிகள் நடைபெறுகிறது.இதனால், ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் போடி லைன் பகுதியில், இதேபோல், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால், 9 பேர் இறந்தனர்.தற்போது, ரயில் பெட்டி தடம் விலகியதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ரயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று தடம் விலகிய ரயில் பெட்டியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.