வாடிப்பட்டியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வாடிப்பட்டியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.;

Update: 2024-07-09 14:38 GMT

வாடிப்பட்டியில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, வடுகபட்டியில் ரெட்டி நல சங்க தலைவர் எஸ் ராஜா பூர்ண சந்திரன் 46-வது பிறந்த நாளையொட்டி, ஏழை எளியவருக்கு நலத்திட்டம் உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

இந்த விழாவில், மாவட்டச் செயலாளர் மோனிகா சதீஷ் தலைமை தாங்கினார்.பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட நிர்வாகி வக்கீல் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இளைஞர் அணி ஒன்றியச் செயலாளர் கார்த்திக் வரவேற்றார்.

இந்த விழாவில், ஏழை எளியவர்களுக்கு இலவசவேட்டி சேலை, அரிசி, தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் வாடிப்பட்டி சங்க நிர்வாகிகள் வக்கீல் செல்வகுமார், கோவிந்த ராஜன் விஜயன், குணசேகரன் ,ஜெயசீலன் , முரளி ராமசாமி, பாப்பையன் , லோகநாதன், முரளி , ரெங்கசாமி, மாயாதரன், நந்தகு மார், கிருஷ்ணன், இளைஞர் அணித் தலைவர் இளமதி, குட்லாம்பட்டி, செமினி பட்டி, ராமையன்பட்டி பூச்சம்பட்டி ஆண்டிபட்டி, கட்டக்குளம் கிளை சார்பாக ஏராளமான இளைஞர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், தொழிலதிபர்கள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாலாஜி நன்றி கூறினார்.

Tags:    

Similar News