மதுரையில் 70வது வார்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
மதுரை 70 வது வார்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாளை ஆதரித்து தென் மாவட்ட தலைவர் வெற்றிக்குமரன் வாக்கு சேகரித்தார்.;
மதுரை மாநகராட்சி 70 வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பாண்டியம்மாளக்கு ஆதரவாக தென் மாவட்ட தலைவர் வெற்றிக்குமரன் துரைசாமி நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.
பாராளுமன்ற தொகுதி செயலாளர் சிவானந்தம், வடக்கு மாவட்ட செயலாளர் பகவதி, மேற்கு மாவட்ட செயலாளர் டேவிட் ராஜன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருன்ஜெயசீலன் உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.