மதுரை மாநகராட்சியில் இனி 5 மண்டலங்கள்: பொதுமக்கள் மகிழ்ச்சி
மதுரை மாநகராட்சியில் இனி 5 மண்டலங்கள் செயல்படவுள்ள நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளை நான்கு மண்டலங்களாக பிரித்து அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது. தற்போது மதுரை மாநகராட்சி 152 கிலோ மீட்டர் சுற்றளவு ஆகவும், மக்கள் தொகை 16 லட்சத்து 15 ஆயிரத்து 990 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதனால், நிர்வாக வசதிக்காக மதுரை மாநகராட்சி உள்ள 100 வார்டுகளின் திசைகளை அடிப்படையாகக் கொண்டு ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, உதவி ஆணையாளர்களை கொண்டு மதுரை மாநகராட்சி பணி செய்ய உள்ளது.
அதனடிப்படையில், புதிதாக வரையறுக்கப்பட்ட மதுரை மாநகராட்சி வார்டுகள் 3 முதல்14, 16, 17, 18, 19, 36 முதல் 40 ஆகிய 21 வார்டுகள் கிழக்கு மண்டலமாகவும்,புதிதாக வரையறுக்கப்பட்ட மதுரை மாநகராட்சி வார்டுகள் 1,2,15, 20 முதல் 28 வரை, 31 முதல் 35 வரை மற்றும் 61 முதல் 66 ஆகிய இருவத்தி ஓரு வார்டுகள் வடக்கு மண்டலமாகவும் செயல்படவுள்ளது.
புதிதாக வரையறுக்கப்பட்ட மதுரை மாநகராட்சி வார்டுகள் 50,51,52 54 முதல் 62 வரை, 67 முதல் 70 வரை, மற்றும்75,76,77 ஆகிய 19 வார்டுகள் மத்தியம் மண்டலமாகவும், புதிதாக வரையறுக்கப்பட்ட மதுரை மாநகராட்சி வார்டுகள் 29,30 41 முதல் 49 வரை 53 மற்றும் 85 முதல் 90 வரை உள்ள 18 வார்டுகள் 4 தெற்கு மண்டலமாகவும், புதிதாக வரையறுக்கப்பட்ட மதுரை மாநகராட்சி வார்டுகள் 71 முதல் 74 வரை, 78 முதல் 84 வரை, 91 முதல் 100 வரை உள்ள வார்டுகள் மேற்கு மண்டலமாகவும்ே இனி செயல்பட உள்ளது.
அதிக மக்கள்தொகை காரணமாகவும் விரிவாக்கப்பட்ட அதிக சுற்றளவு காரணமாகவும் மண்டலங்களின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்திய மதுரை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இனிவரும் காலங்களில் மதுரை மாநகராட்சி தற்போதைய நிலையை விட துரிதமாக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.