வளர்ச்சி திட்டங்களை அதிமுக ஆட்சியில் செய்துள்ளோம்: ஆர்.பி.உதயகுமார்

அதிமுக ஆட்சியில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் கடுகுஅளவிலும் பாரபட்சமின்றி வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளோம். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்.;

Update: 2021-05-29 07:23 GMT

அதிமுக ஆட்சியில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் கடுகுஅளவிலும் பாரபட்சமின்றி வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விளக்கம் அளித்தார்

திருமங்கலம் தொகுதியில் 18 வயது முதல் 44 வது வயது வரை உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது திருமங்கலத்தில் உள்ள பி.கே. என் மெட்ரிக்குலேசன்  பள்ளியில் போடபட்டுவரும் தடுப்பூசி மையத்தை முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார். 

அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது :

மக்கள் மத்தியில் தடுப்பூசித் செலுத்திக் கொள்ள நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் தற்பொழுது இரண்டாவது தடுப்பூசி போடுவதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதற்கு போதுமான தடுப்பூசியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்

அதேபோல் தடுப்பூசி போட்டு மையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பணியாளர்கள் அதிகமான பணிகளை அதிகளவில்  நியமித்து சமூக இடைவெளியை  ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுக்கு தொற்று பரவாமல்  மாவட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். 

மதுரை மாநகராட்சி வளர்ச்சிக்காக 250 கோடி நிதியை புரட்சித்தலைவி அம்மா சிறப்பு நிதியாக வழங்கினார்கள் மதுரை நத்தம் சாலையில் ஆயிரம் கோடியில் பறக்கும் பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தான் மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்ளடிக்கிய உச்சப்பட்டி தோப்பூரில் 27.1.2019 ஆண்டு 1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பாரத பிரதமர் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டது இதற்காக அப்போது இருந்த அம்மாவின் அரசு 223 ஏக்கர் நிலங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது .

அதேபோல் தோப்பூர் உச்சப்பட்டி 583 ஏக்கர் பரப்பளவில் 9,557 வீட்டு மனைகள் கொண்ட துணைக்கோள் நகரம் உருவாக்கப்பட்டது . இது மதுரை மக்களின் வளர்ச்சியைக் கொண்ட திருப்பரங்குன்றம் திருமங்கலம் உள்ளடக்கிய தொகுதிகளாகும்

மதுரை மாவட்ட மக்களின் 50 ஆண்டு காலத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு தராத வகையில் மதுரையில் நடைபெற்ற புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி 1,296கோடி மதிப்பில் முல்லைப்பெரியாறில் இருந்து குமுளி லோயர்கேம்ப் வழியாக குழாய் மூலம் மதுரையில் உள்ள 100வார்டுகளுக்கும் குடிநீர்  வழங்கப்படும் என்று அறிவித்து அதனைத் தொடர்ந்து 4.12.2020 ஒன்று மதுரையில் இதற்கான திட்ட பணிகளை முன்னாள் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

தற்போது முதலமைச்சர் மதுரையில் உள்ள புதிய ஆட்சியர் கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த கட்டிடம் 33 கோடி செலவில் அம்மா அரசில்  கொண்டு வரப்பட்டது. அதுமட்டுமில்லாது அம்மா அரசியல் தான் மதுரையில் 1000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் திட்டப்பணிகள் கொண்டுவரப்பட்டன பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட மதுரையின் மையப்பகுதியில் பல்வேறு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது அதுமட்டுமல்லாது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 59 கோடியில் காளவாசல் பகுதியில் உயர்மட்ட மேம்பாலங்கள் ,அதேபோல் வைகை ஆற்றின் குறுக்கே புரட்சித்தலைவர் பெயரிலும், புரட்சித்தலைவி அம்மா பெயரிலும்  32 கோடியில் இரண்டு உயர்மட்ட மேம்பாலங்களை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்

 அதேபோல் பாண்டி கோவில் ரிங் ரோடு அருகே 50 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பால பணி அம்மா அரசில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது அதேபோல் மூன்று மாவடியில் இருந்து ஆனையூர் வரை 50 கோடியில் நெடுஞ்சாலைத்துறை  மாநகராட்சி  சிறப்பு அனுமதி பெற்று இணைப்பு சாலை போடப்பட்டுள்ளது

மதுரை மாவட்டத்தில் அம்மா அரசின் போது பேரூராட்சிகள், ஊராட்சிகள், ஒன்றியங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள், என்று அனைத்து பணிகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைதுறை, மக்கள் நல்வாழ்வு துறை, கூட்டுறவு துறை, வருவாய் துறை உள்ளடிக்கிய பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

10 தொகுதியில் வளர்ச்சிகளை உள்ளடக்கி அனைத்து பணிகளை மேற்கொண்டதை மதுரை மக்கள் அறிந்த காரணத்தினால் தற்போது இருக்கும் ஆளும் கட்சி முன்வைத்த அவதூறுகளையும் குற்றச்சாட்டையும் தாண்டி மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 5 தொகுதிக்கு அதிமுகவுக்கு வெற்றியை வழங்கியுள்ளார்கள்

10 தொகுதிகளில் நான் நடைபயணம் மேற்கொண்ட பொழுது அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் மக்களிடம் 

 மனுக்கள் பெற்று முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் அந்த தொகுதிக்கு சென்று அம்மா அரசில் தான் எங்களால் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் பாரபட்சமில்லாமல் நிதி ஒதுக்கி மக்களின் கோரிக்கை அடைப்பில் தான் திட்டங்கள்  வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த வளர்ச்சியும் மையமாக வைத்துதான் அனைத்து திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் மதுரை மக்களுக்காக கோரிக்கைகளை செயல்படுத்தும் வண்ணம்  மாவட்ட நிர்வாகத்திற்கு நான் கோரிக்கைகளை வைக்க கடமைப்பட்டுள்ளேன்

மதுரை மாவட்டத்தில் 420 ஊராட்சிகள் உள்ளன இதில் திருமங்கலம் தொகுதியில் 116 ஊராட்சிகள், 324 வருவாய் கிராமங்கள், இரண்டு பேரூராட்சிகள், நகராட்சிகள் உள்ளடக்கிய மிகப்பெரிய சட்டமன்ற தொகுதி ஆகும் என்பது மதுரை மக்களுக்கு நன்றாக தெரியும் கிராமங்களில் அடிப்படை தேவைகளை மக்களின் கோரிக்கை அடிப்படையில் சாலை வசதி ,குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளை உருவாக்க அரசின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பதை நான் மறுப்பது இல்லை மறைக்கவும் இல்லை

 ஒரு தொகுதியில் வளர்ச்சி பணிகள், திட்டங்களை கொண்டு வருவதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேவையை முன்வைத்து கோரிக்கைகளை முன்வைத்து திட்டங்கள் பெறுவதில் செயல்படுத்திக் காட்டி மக்கள் நம்பிக்கை பெறுவதும் தான் சார்ந்துள்ள இயக்கத்தின் செல்வாக்கு வளர்ப்பதும் ஒவ்வொரு மக்கள் பிரதிநிகள் தலையாய கடமையாக காலங்காலமாக இருந்து வருவதை மாண்புமிகு  வணிகவரித்துறை அமைச்சர் நன்றாக அறிவார்

10 தொகுதிகளுக்கும் பேரிடர் மீட்பு பணிகாலங்களில்  நோய் தடுப்பு பணிகள் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் உருவாக்குவதிலும் தடுக்க தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதிலும் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அம்மா அரசு அனைத்து மக்களை அரவணைத்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாராமல் வளர்ச்சித் திட்டங்களை தந்தார்கள் என்று மக்கள் கருதினார்கள்

மதுரை மாவட்ட மக்களை பாதுகாக்க தற்போது 20 நாட்கள் நடவடிக்கை வரவேற்கத்தக்கது இருந்தபோதிலும் நாங்கள் முதல் அலையில் மக்களை காத்திட நாங்கள் எடுத்த நடவடிக்கைகளை தாங்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளிட்ட மதுரை மாவட்ட மக்கள்  பாராட்டி நினைவு கூறுகிறார்கள் நினைவு கூறுவதை மக்கள் பணிக்கு கவசமாக ஊக்கமாக பரிசாக அமையும் என்பார்கள் 

பேரிடர் காலங்களில்  மக்களைக் காக்கும் பணிகளுக்கும் ,வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதிலும் உள்ள வேறுபாட்டை மாண்புமிகு அமைச்சர்  நன்கு அறிந்தவர் என்ற  அடிப்படையில் நான் தரும் விளக்கங்களைஅவர் ஏற்றுக் கொள்வதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

Tags:    

Similar News