மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் உலக பக்கவாத தின கருத்தரங்கம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, வேலம்மாள் மருத்துவமனையில் உலக பக்கவாத தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2021-10-30 14:45 GMT

மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் உலக பக்கவாத நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, வேலம்மாள் மருத்துவமனையில் உலக பக்கவாத தினம் கொண்டாடப்பட்டது. பக்கவாதம் ஏற்பட்ட 6 மணி நேரத்திற்குள் சிகிட்சை எடுத்தால் உடனடியாக சரி செய்யலாம். Code Stroke (எனும் புதிய மருத்துவ சேவை மையம் துவங்கப்பட்டது.) 

இதில், வேலம்மாள் மருத்துவகுழுத் தலைவர் முத்துராமலிங்கம் விளக்கேற்றி துவக்கி வைத்தார். வேலம்மாள் மருத்துவ நரம்பியல் நிபுணர் கணேஸ் பாண்டியன், உதவி பேராசிரியர் கவிதா ஆகியோர் கலந்து காெண்டனர்.

பக்கவாதம் ஏற்பட்டால், அதன் பாதிப்புகளை சரி செய்ய எந்தெந்த மாதிரி சிகிட்சை பெற வேண்டும். பக்கவாதம் ஏற்பட்டவர்களை 80% குணப்படுத்த முடியும். உடனடியாக அவசர சிகிச்சை செய்ய வேண்டும். அனைத்து வயதினருக்கும் கூட ஸ்ரோக் (பக்கவாதம்) வரலாம். சர்கரை நோய், அதிக எடை, குடி பழக்கம், மன அமைதியின்மை. முறையான உடற்பயிற்சியின்மை போன்றவற்றை கடைபிடிக்காவிட்டால் பக்கவாதம் ஏற்படலாம்.

பக்கவாதம் ஏற்படும் அறிகுறிகள்: பார்வை மங்குதல், முகவாதம், தோள்பட்டை, பேச்சு வராமல் போவது போன்றவை.

நோயின் அறிகுறிகள். பக்கவாதம் வந்த (கோல்டன் டைம்) பொன்னான நேரம். 6 மணி நேரத்தில் சிகிச்சை பெற்றால் மூளையில் அடைப்புகளை சரி செய்து கொள்ளலாம்.

Tags:    

Similar News