பெண்களை சமத்துவ மனப்பான்மை யுடன் அணுகவேண்டும்: போலீஸ் எஸ்.பி.

பெண்களை சமத்துவ மனப்பான்மையுடன் அணுகினால் மட்டுமே பாலியல் துன்புறுத்தல்க ளை தடுக்க முடியும் என்றார் மதுவிலக்கு எஸ் பி;

Update: 2023-09-02 08:30 GMT

பைல் படம்

பெண்களை சமத்துவ மனப்பான்மையில் அணுகினால் மட்டுமே பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க முடியும் என்றார் தென்மண்டல மதுவிலக்கு அமலாக்கத்துறை எஸ் பி சுஜீத்குமார்.

பெண்களை சமத்துவ மனப்பான்மையில் அணுகினால் மட்டுமே பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க முடியும் என்று தென்மண்டல அமலாக்கத்துறை எஸ் பி பேசினார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெண்ணிய கல்வி மையம் மற்றும் ரூசா திட்டம் சார்பில் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த கருத்தரங்கம் நடந்தது. பதிவாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கத்தில் தென்மண்டல அமலாக்கத்துறை எஸ் பி சுஜீத்குமார் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது. பெண்கள் மீதான பாலியல் சீண்டலுக்கு ஆணாதிக்க மனநிலையே காரணம். பெண்கள் வளர்ச்சியை ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெண்களை சமத்துவ மனப்பான்மையில் அணுகினால் மட்டுமே இதை தடுக்க முடியும். பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல் எந்த வகையிலும் வரலாம். அதை சரியாக கையாள தெரிய வேண்டும். ஒரு வினாடிக்கு ஒரு பெண் பாலியல் சீண்டலால் பாதிக்கப்படுகிறார் என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆனால், அதற்கேற்ப புகார்கள் அளிக்கப்படுவதில்லை. உரிய விழிப்புணர்வே இதற்கு தீர்வு என்று பேசினார்.

ஏன் இந்த கருத்தரங்கில் சோகோ அறக்கட்டளை இணை இயக்குனர் செல்வ கோமதி, சிண்டிகேட் உறுப்பினர் நாகரத்தினம், டீன் கண்ணதாசன் பெண்ணிய கல்வி மையம் இயக்குனர் ராதிகா தேவி பேராசிரியர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.மைய ஆய்வாளர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

ஏலச்சீட்டில் நஷ்டம் பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை


ஏலச்சீட்டில் நஷ்டம் அடைந்ததால் பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணாபுரம் காலனி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் மணிமாறன் 40. இவர் ரியல் எஸ்ஸ்டேட் தொழில் செய்து வந்தார். ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். இந்த நிலையில் ஏலச் சீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் பணம் கட்டியவர்களுக்கு திருப்பி செலுத்த முடியவில்லை. அவர்கள் நெருக்கடி செய்ய ஆரம்பித்தனர் .இதனால் மன அழுத்தத்தில் இருந்தவர் வீட்டில் மொட்டை மாடிக்கு சென்று தனக்குத்தானே மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார் .இதில் கருகி உயிருக்கு போராடிய நிலையில் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமாறன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, மனைவி பூங்கோதை கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு ப் பதிவு செய்து மணிமாறனின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உப்புச்சத்து அதிகமானால் இறந்து விடுவார்கள் என்ற கூகுள் தகவலால் விஏஓ மகன்  தற்கொலை:

மதுரை  பசுமலை அன்னை மீனாட்சி நகர் கோல்டன் சிட்டி ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் கங்கா ராஜூ.இவர் மகன் விசா குமார் 30. பி.ஈ.பட்டதாரியான இவர் வெளிநாட்டு நாய்களை வாங்கி வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்தார் .இவர் தந்தை கங்காராஜு வி. ஏ.ஓ வாக பணியாற்றி வருகிறார். மகன் விசாகுமாருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரை மதுரை கேகே நகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவருக்கு உப்பு சத்து அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் வீட்டுக்கு வந்த விசாக குமார் உப்புசத்து அதிகமானால் எந்த விதமான பாதிப்புகள் ஏற்படும் என்று கூகுளில் தேடியுள்ளார்.அதில் உப்பு சத்து அதிகமானால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விடுவார்கள் என்ற தகவலை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து உப்புச்சத்தால் இறந்துபோவதை விட அதற்கு முன்னதாக நானே தூக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு வீட்டில் மாடியில் உள்ள அறைக்குச் சென்றுள்ளார். அங்கு, சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து , தந்தை கங்காராஜு திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மகன் விசா குமாரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

எட்டு வருடங்களாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது .

மதுரை  அருகே பரவை பொற்குடம் நகர் மல்லிகை நான்காவது தெருவை சேர்ந்தவர்ஜேம்ஸ் ஐசக் மகன் மேசாக்கெல்லாலாவிஸ்29.இவர் கூடல்நகரைச்சேர்ந்த 26. வயது இளம்பெண்ணை எட்டு வருடங்களாக காதலித்து வந்தாராம்.அவரை திருமணம்செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி எட்டு வருடங்களாக உல்லாசமாக இருந்துவந்துள்ளார்.

பின்னர், அவர் காதல் கசந்தது.அந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார்.அவரை மிரட்டவும் செய்தார்.இதனால் , மனமுடைந்த அந்தப்பெண் அணைத்து மகளிர்வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவரை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்ல வாலிபர் மேசாக்கெல்லாலாவிஸ்- ஐ கைது செய்தனர்.

சாலையில் நடந்து சென்ற தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்தவர் கைது 

மதுரை நரிமேடு செக்கடி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜாமணி மகன் ஆனந்த முருகன் 36 .இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர், நிறுவனத்தில் 24க்கும் மேற்பட்ட பெண்களும் 25க்கும் மேற்பட்ட ஆண்களும் வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று இவரது நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களில் ஒருவர் தாசில்தார் நகர் பகத்சிங் தெருவில் சென்று கொண்டிருந்தார் .

அப்போது அவர் தனியாக செல்வதை பார்த்து பின் தொடர்ந்து சென்ற வாலிபர் ஒருவர் அந்த பெண்ணிடம் தகராறு செய்து அவரை தவறான இடத்தில் தொட்டு சித்திரவதை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் மேனேஜர் ஆனந்த முருகனிடம் கூறியுள்ளார். அதற்கு அடுத்தநாள் அந்த வாலிபர் அந்தப்பெண்ணை எதிர்பார்த்து அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் அருகே காத்திருந்தார்.

அப்போது அவரை அடையாளம் கண்டு நிறுவன மேனேஜர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மேனேஜர் ஆனந்த முருகனை ஆபாசமாக பேசி தாக்கினார். இதை பார்த்த அந்த நிறுவன ஊழியர்களும் சேர்ந்து அந்த வாலிபரை படித்தனர். பிடிபட்ட வாலிபரை அண்ணாநகர் போலீசில் ஒப்படைத்தனர் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது, அந்த வாலிபர் யாகப்பா நகர் பாலாஜி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நாட்ராயன் 36 என்று தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News