மதுரையில் பாஜக சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் நலத்திட்ட உதவிகள்

மதுரையில் பாஜக சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;

Update: 2024-07-09 14:18 GMT

மதுரையில் பாஜக சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மதுரை மகால் மண்டல் பாஜக சார்பில் மஞ்சணக்காரத்தெருவில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் 200 மாணவர்களுக்கு 50 ஆயிரம் மதிப்பில் ஸ்கூல் பேக் , நோட், உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக  தேர்ந் தெடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் ,மதுரை நாடாளுமன்ற தொகுதி மஹால் மண்டலில், அதிக வாக்குகள் பெற்றுக் கொடுத்த பொதுமக்களுக்கும், மற்றும் 47 வது வார்டில் உள்ள மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புக் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு, மதுரை மாவட்ட பாஜக  தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் மற்றும் மண்டல் தலைவர் திருமுருகன் முன்னிலை வகித்தனர் . மண்டல் பொதுச்செயலாளர் பால சுப்பிரமணியன் மற்றும் குருசாமி ஆகியோர் வரவேற்புரை கூறினர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன்,தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்வி நலத்திட்ட விழாவிற்கான நோட்புக், பேனா , பாக்ஸ் மற்றும் ஸ்கூல் பேக் உபகரணங்கள் வழங்கும் ஏற்பாடுகளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணன் செய்திருந்தார்.

விழாவில்பள்ளி மாணவர்களிடம் பேசிய பேராசிரியர் ராம சீனிவாசன் கூறுகையில்,

50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை பற்றிய கார்ட்டூன் வரையப்பட்டு அதில், நகைச்சுவையாக குறிப்பிடப்பட்டிருக்கும், இந்தியாவில் அனைவரும் வறுமையில் உள்ளனர். ஆகையால், அமெரிக்க குழந்தைகள் இந்த உணவை சாப்பிட்டு தங்கள் உடல் நலத்தை தேற்றிக் கொள்ளவும் என இருக்கும்.

தற்போது 50 வருடங்களுக்குப் பின் தற்போதைய கார்ட்டூன் சித்திரத்தில் அமெரிக்க குழந்தைகளே நீங்கள் படித்து,நல்ல வேலையில் இருங்கள். இல்லையேல் உங்கள் வேலைவாய்ப்பை இந்தியர்கள் பறித்துக் கொள்வார்கள் என்ற மாதிரி உள்ளது. இதற்கெல்லாம் காரணம், பிரதமர் மோடியின் சீரிய முயற்சி தான்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உலகில் பல்வேறு பகுதியில் இருந்து மாணவர்கள் பயில்கிறார்கள். ஆனால், சாதனையாளர்களாக விருது பெரும் மாணவர்கள் இந்தியர்களாக இருக்கின்றனர். இதற்கு நமது கல்வியே காரணம். மாணவர்கள் தாய் தந்தையரை மதியுங்கள் நமக்கு கல்வி கொடுக்கும் ஆசிரியரை மதியுங்கள் ஆசிரியரை குறை கூறாமல் பாடத்தில் காணும் செலுத்தி சாதனையாளராக மாறுங்கள்.

இவ்வாறு பேராசிரியர் ராம சீனிவாசன் கூறினார்.

Tags:    

Similar News