மதுரை அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா
மதுரை அருகே திமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.;
மதுரை பதினாறு கால் மண்டபம் அருகே, திமுக சார்பில், நீர்மோர் பந்தல் துவக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றம் 16- கால் மண்டபம் பகுதியில், திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்துவைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் பகுதி திமுஅக் செயலாளர் கிருஷ்ணப்பாண்டி, மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் விமல் தலைமையில் நீர்மோர் பந்தல் திறந்துவைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் துப்புரவு பணியாளர்களுக்கு, இளநீரும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு குளிர்பானமும் வழங்கி, நீர் மோர் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.