மதுரை வில்லாபுரம் அருகே கோவில் இடிப்பை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
மதுரை வில்லாபுரம் அருகே கோவில் இடிப்பைகிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.;
மதுரை விமான நிலையம் செல்லும் சாலை விரிவாக்க பணிகள் செய்வதற்காக நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ,மதுரை வில்லாபுரத்தில் உள்ள சங்க விநாயகர் கோயில் ஆக்கிரமிப்பில் உள்ளதால், நெடுஞ்சாலை துறையினர் அகற்றக்கோரி, இரண்டு மாதங்களுக்கு முன்பு கோயில் நிர்வாகிகளிடம் கூறியுள்ளனர்.
அதற்கு கோவில் நிர்வாகமும் 15 நாட்களில் அகற்றுவதாக வாக்குறுதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டு மாதங்கள் ஆகியும் ஆக்கிரமிப்பு அகற்றாததால், நெடுஞ்சாலைத் துறையினர் போலீசார் பாதுகாப்புடன் ஜேசிபி வாகனம் கொண்டு இடிக்கத் தொடங்கினர்.
இதனைத் தடுத்து நிறுத்திய கோவில் நிர்வாகம் மற்றும் இந்து முன்னணியினர் இன்னும் இரண்டு நாட்களில் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இடிக்க வந்த ஜே.சி.பி. வாகனம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து ,கோவில் நிர்வாகிகள் கோவில் பகுதியில் இடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், வில்லாபுரம் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.