திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் வாகன ஓட்டி யார்?: ஓட்டுனரா, தலையாரியா?

திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் வாகனத்தை ஓட்டுனர் ஓட்டாமல், கிராம நிர்வாக தலையாரி வாகனத்தை இயக்குவதாக கூறப்படுகிறது

Update: 2021-08-09 16:22 GMT

வட்டாட்சியர் வாகனத்தை இயக்கும் கிராம தலையாரி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டாட்சியருக்கு அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் செய்வதற்கு அரசு சார்பாக பொலிரோ ஜீப் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தை இயக்குவதற்கு, ஓட்டுனர் ஒருவரையும் அரசு நியமித்துள்ளது. ஆனால் ,கடந்த சில ஆண்டுகளாக வட்டாட்சியர் வாகனத்தை ஓட்டுனர் ஓட்டவில்லை எனவும், அதற்கு பதில் திருப்பரங்குன்றம் கிராம நிர்வாக தலையாரி வாகனத்தை இயக்குவதாகவும் கூறப்படுகிறது.

தலையாரி கிராம நிர்வாக அலுவலகம் செல்லாமல், வட்டாட்சியர் அலுவலகத்திலேயே இருப்பதாகவும், மேலும், எந்த வட்டாட்சியர் வந்தாலும், இவர்தான் வாகனத்தை இயக்குவதாகவும், வட்டாட்சியர் அலுவலகத்தில் இவரது தலையீடு அதிக அளவில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எழுப்பும் சில கேள்விகள்:

  • அரசு நியமித்த ஜீப் டிரைவர் எங்கே? தலையாரிக்கு யார் சம்பளம் கொடுக்கிறார்கள், இரட்டை சம்பளம் பெறுகிறாரா?
  • அரசு வாகனத்தை இயக்குவதற்கு தலையாரிக்கு அனுமதி கொடுத்தது யார்? எந்த ஒரு வட்டாட்சியர் வந்தாலும், இவரே வாகனத்தை  இயக்குவதற்கு காரணம் என்ன?
  • வட்டாட்சியருக்கு இவர், வாகனத்தை இயக்குவது தெரியாதா?  ஏன் கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியாளர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட நபர் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அரசு வாகனத்தை தவறாக பயன்படுத்திய காரணத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News